மிச்சமான காய்கறி கழிவுகளால்ஒரு சூப்பரான சமுதாய சேவை

நீங்கள் தீவிரமான ஆத்திகரா..? சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? அப்படியென்றால் இதை படியுங்கள் .
நீங்கள் தீவிரமான நாத்திகரா.. ? சமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா..? அப்படியென்றாலும் இதை அவசியம் படியுங்கள்.

மாதத்திற்கு ஒரு முறையாவது உங்களுக்கு நெருக்கமான உறவினர்கள் , நண்பர்கள் வீட்டு கல்யாணம், சீர் , காதுகுத்து, பிறந்த நாள் கொண்டாட்டம் , சீமந்தம் என ஏதாவது ஒன்றில் கலந்து கொள்ள நிச்சயம் செல்வீர்கள் தானே ?

சத்தமில்லாமல் , செலவில்லாமல், சிரமம் இல்லாமல் ஒரு மிக பெரிய சமூக சேவையை செய்ய உங்கள் முன்னே வாய்ப்பு காத்திருக்கிறது .

ஆம் நண்பர்களே , அந்த விசேசத்தில் உங்கள் அத்துணை பேருக்கும் தவறாமல் அறுசுவை
உணவு வழங்கப்பட இருக்கிறது தானே.. ? நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சிறு
முன்னேற்பாடு தான் .உங்கள் உறவினரிடம் , நண்பரிடம் அந்த நிகழ்ச்சிக்கு முன்பே சொல்லிவிடுங்கள்... விசேஷத்திற்க்கான காய்கறிகளை சுத்தம் செய்கிற பொழுது , எந்த காரணம் கொண்டும் சீவப்பட்ட தோல்கள் , கழிக்கப்பட்ட காய்கள் , மிச்சமான பழ தோல்கள் , வாழை பழங்கள் என எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக விருந்து பறிமாறப்பட்ட எச்சில் வாழை இலை , பாக்கு மட்டை தட்டோடு சேர்ந்து தூக்கி எறிந்து விடாமல் தனியாகவே வைத்திருக்க சொல்லுங்கள்..

100 பேர் கலந்து கொள்கிற விசேசத்தில் கண்டிப்பாக சுமார் 25 கிலோ அளவில் இந்த கழிவுகள் இருக்கும் . அதே 1000 பேர் என்றால் , சுமார் 150 கிலோ முதல் 200 கிலோ அளவிற்க்கு
மீந்து போகும்

இதை தனியாக ஒதுக்கி வைத்து , சுத்தம் செய்த ஒரு 2 அல்லது 3 மணி நேரத்திற்குள்ளாக அதை அருகில் இருக்கிற கோசாலையில் சேர்த்து விட வேண்டியது .இது ஒன்று மட்டுமே நீங்கள் கவனத்தொடு செய்ய வேண்டிய வேலை. 3 மனி நேரத்திற்க்கு பிறகு மிச்சமான காய்கறிகளில் இருந்து ஒருவிதமான புளிப்பு வாசம் எடுக்க ஆரம்பித்து விடும் . அதற்க்கு முன்பாக அவற்றை கோசாலையில் உள்ள மாடுகளுக்கு உணவாக தந்து விட்டால் , மாடுகள் அவற்றை விரும்பி உண்ணும்

இப்படி எல்லோரும் மிச்சமான தாவர கழிவுகளை கோசாலையில் கொண்டு சேர்க்க ஆரம்பித்துவிட்டால் , சுத்தம் செய்ய படாமல் தெரு ஒரத்தில் தூக்கி எறியப்படும்
காய்கறி, பழ தோல்களின் நாற்றத்தால் மூக்கை பிடித்துகொண்டு நடக்க வேண்டியதும் இல்லை .. கார்பரேசன் காரரை , முனிசிபாலிடி காரரை என்னத்தை கிழிக்கிறார்கள் என ..திட்ட வேண்டிய அவஸ்யமும் இல்லை

அது மட்டுமல்ல நண்பர்களே .... எளிதாக மட்கும் இந்த கழிவுகளோடு மட்காத குப்பைகளான ப்லாஸ்டிக், தண்ணி பாட்டில் போன்றவையும் சேர்கிற பொழுதான் அதை சுத்தம் செய்வது மிக பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கிரது . மட்குகிற குப்பைகளை
தனியாக பிரிக்கிறபொழுது , எல்லமே ஈஸி .

அதுமட்டுமல்ல ஒரு மாடு சுமார் 25 கிலோ தாவர கழிவுகளை ஒரு நாளில் மேய்ந்து , அடுத்த நாள் காலையிலேயே சுமார் 10 கிலோ சாணத்தை , இயற்கை உரத்தை தந்து விடுகிறது.. இதன் மூலமாக இந்த இயற்கைக்கும், சமுதாயத்திற்க்கும் மிக பெரிய உதவியை செய்து விடுகிறது.. . குப்பையும் சுத்தமாகிறது.

கோசாலை இல்லாத ஊரில் , இருக்கவே இருக்கிறது மாட்டு தொழுவங்கள் .. குறைந்தது 5 மாடுகள் இருக்கிற மாட்டு தொழுவங்கள் ஒன்று கூடவா இல்லாமல் போகும் ?

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு ..... யாராவது ஒரு தேவன் வந்து நம்மை எல்லாம் காப்பாற்ற போவதில்லை நம்முடைய குழந்தைகளின் வருங்கால நலனிற்க்காவது நாம்தான் இதை செய்தாக வேண்டும் நன்பர்களே

ஓரு முக்கிய விசயம்.. மாடுகளும் நம்மை போல ஒரு உயிரினம்தான். அதிகம் அசுத்தப்படாத கழிவுகளையே அவைகளும் விரும்பி உண்ணும் . வேறு எந்த குப்பைகளும் அவற்றோடு கலக்க கூடாது .. கவனம்.

அடுத்தமுறை கல்யாணத்திற்கு போகும் முன்பாக , காய்கறி கழிவுகளை தனியாக எடுத்து வைக்க சொல்லி உங்கள் நண்பருக்கு தகவல் சொல்லி விடுவீர்கள்தானே.. ?

ஆத்திகர்களுக்கு காமதேனு , சாட்சாத் பரப்பிரம்மம் . கடவுள் வழிபாட்டில் உயர்ந்தது.

நாத்திகர்களுக்கோ சமுதாய சேவையில் , சிறந்த ஒன்று.

திருப்பூரில் உள்ள நண்பர்கள் பெருமானல்லூர் ரோட்டில் உள்ள கங்கா கோசாலையை தொடர்பு கொள்ள ....60 மாடுகள் உள்ளது....தொலை பேசி ..... அய்யப்பன் 9940891967.

(தகவல் உதவி : உயர்திரு.சீனிவாசன் அவர்கள், இந்திய பசுமை அமைப்பு. )

எழுதியவர் : murugaanandan (24-Jan-14, 12:18 am)
பார்வை : 125

சிறந்த கட்டுரைகள்

மேலே