அம்மாவின் ஆசை

அழைப்பு மணி ஒலிப்பது கேட்டு சமையலறையில்
பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த முத்துலட்சுமி
எட்டி பார்த்து குரல் கொடுத்தால்
ஏங்க வந்திருக்கிறது யாருன்னு பாருங்க - அதற்கு செவி சாய்தவனாய் ஆறுமுகம் ம்ம் என்றபடி எழுந்து கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தார்

ஆறுமுகம் மூன்று வருடங்களுக்கு முன்பு மின்வாரியத்திலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் உள்ளார், அழகும் அன்பும் நிறைத்த மனைவி முத்து லட்சுமி, பெயருக்கேற்றாப் போல் மனது யார் மனதும் புண்படும் படி பேச மாட்டாள், குமாரவேலன், ராஜகோபாலன், கண்ணன் என்ற மூன்று மகன்கள்.

மூவரும் தொழில்நுட்ப கல்வி முடித்தவர்கள் குமாரவேலன் மின்வாரியத்திலும் மற்றவர்கள் தொலை தொடர்பு துறையிலும் பணியில் உள்ளனர், மூவருக்கும் தனி குடித்தனம் வைத்தாயிற்று ஒரு சில காரணங்களினால், இப்போது இவர்கள் இருவர் மட்டும் தனித்து வாழ்கின்றனர்,

வாயில் கதவை திறந்ததும் குமாரவேலன் நின்றிருந்தான், " வாடா" என்று கூறியவாறே உள்ளே திரும்பினார், வரேம்பா நல்ல இருக்கீங்களா அம்மா எங்கப்பா, - பேசிக்கொண்டே பின் தொடர்ந்தான் தந்தையை,

வாடா பெரியவனே எப்படி இருக்க புள்ளைங்க நல்ல இருக்காங்களா என்றபடி கைகை புடவையில் துடைத்துக்கொண்டே வெளியில் வந்தால், ம்ம் எல்லா நல்ல இருக்காங்க நீங்கதான் வீட்டுப்பக்கம் எட்டி பாக்கறதே இல்லை, என்று சலித்துக்கொண்டவனை அதை விடுப்பா இவ்ளோ காலையிலயே வந்திருக்க ஆபீஸ் போகலையா? என்று தன் பக்கம் இழுத்தால் முத்து,

போகணும்மா அதுக்கு முன்னாடி உங்கள பாத்திட்டு போலானுதான் வந்தேன், இதைக்கேட்டதும் தலையை நிமிர்த்தி பார்த்தார் ஆறுமுகம், - சொல்லுப்ப என்ன விசயம் என்றார்,

அது ஒன்னும் இல்லப்பா உங்களுக்கு அடுத்த வாரம் கல்யாண நாள் வருதில்ல அத இந்த வருசம் நல்லா விமர்சியா பண்ணலான்னு நெனைக்கிறோம் என்றதும் அப்போதுதான் நியாபகம் வந்தவர்களாய் இருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டனர், அதுவுமில்லாம நீங்களும் வீட்டுப்பக்கமே வரதில்லை பசங்களும் கேட்டிட்டே இருக்காங்க உங்கள பாக்கனும்னு, பசங்களுக்கு இப்ப லீவ் வருது, நம்ம எல்லாம் குடும்பமா சேர்ந்து இருந்து ரொம்ப நாள் ஆச்சு - அதான் எல்லாரும் சேர்ந்து பக்கத்துல எங்கையாவது டூர் போலான்னு நெனச்சேன் அத சொல்லத்தம்மா வந்தேன் என்றவனை பார்த்தவர் வேண்டாம்ப நீங்கவேணா போயிட்டு வாங்க என்றார் அப்பா, இந்த வார்த்தையை கேட்டதும் குமரவேலனுக்கு முகம் பொசுக்கென்று ஆனது

அதை கவனித்தவளாய் கணவனைப் பார்த்து ஏங்க
புள்ள ஆசைப்படுறான் அதுவுமில்லாம நம்மளும் மூணு வீட்டுக்கும் தனித்தனியா போகமுடியாது அவன் சொன்ன மாதிரியே போயிட்டு வராலங்க என்று பேசிக்கொண்டே அவரின் அனுமதிக்கு காத்திராமல்

மகனைப்பார்த்து எப்ப போலாம்பா, எதனை நாள்னு சொல்லு என்றதும்

நான்கு நாள்மா இப்ப கொடைக்கானலில் சீசன் பிரண்டோட வீடு அங்க இருக்கு நைட்ல தங்கிக்கலாம் அப்படியே குற்றாலம் போலாம்மா என்றவனை, ஏம்பா ராமேஸ்வரம் போக முடியாதா அங்க போய் ரொம்ப நாள் ஆச்சு என்றால், ம்ம் சரிம்மா போகலாம் என்று கூறியபடியே மணிக்கட்டை திருப்பி பார்த்தவன் நேரம் ஆகிடுச்சு கெளம்புறேன் என்றான்,

சரிப்பா பாத்து போயிட்டு வா என்று அப்பா வழியனுப்ப, சாப்பிட்டிட்டு போடா என்றால் அம்மா பாசத்துடன், வேண்டாம் என்று சொன்னால் கண்டிப்பாக அம்மா கோபித்துக்கொள்வாள் என்று எண்ணியவன் சரிம்மா என்று வாய் மூடுவதற்குள் நான்கு இட்லியை தட்டில் வைத்து கொண்டுவந்தவள் தானே ஊட்டியும் விட்டால் அன்பும் பாசமும் கலந்து,
விடைபெற்று செல்கையில் சரிப்பா போயிட்டு எப்போ போறதுன்னு போன் பண்ணுகிறேன் சொல்லிவிட்டு நகர்ந்தான்,

இப்போதுதான் முதன்முதலில் பார்ப்பது போல அவன் மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்தால் முத்துலட்சுமி,

அன்றே போகும் முடிவாகிவிட்டது, இரண்டு தம்பிகளுக்கும் சொல்லியாகிவிட்டது, வண்டிக்கு சொல்வது முதல் அங்கு சென்று தங்குவது வரை அனைத்தையும் யோசித்து செய்துகொண்டிருந்தான் குமரவேலன்.

நாட்கள் நகர்ந்தது நாளை இரவு பயணம் செய்ய வேண்டும்,
முத்து லட்சுமி கணவனை அழைத்து ஒரு காகித்தையை கொடுத்தால், என்னவென்று கேட்க வாய் திறப்பதற்குள் அவளே ஆரம்பித்தால்

நாலு நாள் தங்கனுன்ன குழைந்தங்க நெறைய வாங்கி தரவேண்டி இருக்கும், அது நல்ல பொருளானு தெரியாது அதுவுமில்லாம தேவையில்லாத செலவு அதன் அதுல இருக்கற பொருள வாங்கிட்டு வாங்க நம்மாலே கொஞ்சம் ஏதாவது செஞ்சுக்கலாம் என்றவளின் வார்த்தையில் அர்த்தமுள்ளதை அறிந்தவன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்.

இன்று இரவு கிளம்ப வேண்டும் என்பதால் நேரமாகவே எல்லா பலகாரங்களையும் செய்யதொடங்கிவிட்டால் முத்துலெட்சுமி, அவள் கை பக்குவம் அருமையானது பார்த்து பார்த்து செய்வாள்,

மாலைநேரத்தில் மகன்கள் ஒவ்வொருவராக வர தொடங்கினர், அனைவரையும் அன்புடன் வரவேற்று சிற்றுண்டி கொடுத்துக்கொண்டிருந்தாள், இதில் நாடு மருமகளும் கடைசி மருமளும் பெற்றோருடன் வந்திறங்கினர்,

வீடே திருவிழா கோலம் கொண்டிருந்தது புறப்பட வண்டி வந்தகிற்று, இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் தங்கள் உடமைகை எடுத்துக்கொண்டு வண்டியில் ஏறத் தொடங்கினர்,

அனைவரையும் ஏற்றிவிட்டு வீடெல்லாம் ஒழுங்காக உள்ளதா என்று ஒருமுறை பார்த்துவிட்டு தாளிட்டு வெளியே வந்தால் முத்துலெட்சுமி, வண்டியின் முன்புறம் குமரவேலனும் வண்டி ஓட்டுனரும் ஏதோ விவாதித்து கொண்டிருந்தனர், மற்றவர்கள் ஜன்னல் ஓர இருக்கைக்கு விவாதம் செய்து கொண்டிருந்தனர்,

ஆறுமுகமும் முத்துலச்சுமியும் குமரவேலனை பார்த்து என்னப்பா என்று கேட்டவாறே வண்டியின் முன்புறம் வந்தனர்,

ஓட்டுனர் ஆரம்பித்தான் வண்டியில் சீட்டுக்கு அதிகமா ஆள் இருக்கு அவ்ளோ தூரம் போய் வரதுன்னா கஷ்டம் வேணும்னா ஒரு ஆள மட்டும் முன்னாடி உக்கார வெச்சுக்கலாம் என்றான் குமரவேலன் தான் என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தான், உள்ளேயிருந்து சந்தோசத்தில் சிரிப்பும் பேச்சுமாய் கேட்டுக்கொண்டிருந்தது வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியாமல்,

இதற்கப்புறம் வேறு வண்டி பிடித்து செல்வது என்பது முடியாத காரியம், ப்ரோக்ராம் ஐ ரத்து செய்துவிட்டு வேறொருநாள் போகலாமா என்றாலும் மற்றொரு சமயம் அமைவது கடினம், பல வழிகளில் யோசித்தவாறு இருந்தான்,

யாரை இறக்கி விடுவது, யாரை விட்டுச் செல்வது,
வேண்டாம் என்று யாரை சொன்னாலும் அது தர்ம சங்கடம் ஒன்றும் புரியாமல் நின்றான், வண்டியிலிருந்து மற்றவர்களுக்கு விசயம் தெரிந்ததும் யாருக்கும் முகமே இல்லை, யாரை விட்டுச் செல்வது என்று,

எல்லோருக்கும் உள்ளூர பயம் இருந்தது

முத்துலட்சுமி மெதுவாக ஆரம்பித்தால் நீங்க போயிட்டு வாங்கப்ப நா இருந்திக்குறேன் என்றதும் ஆமாம்பா போயிட்டு வாங்க நாங்க இருந்துக்குறோம் தொடர்ச்சியாக கூறினான் ஆறுமுகம்,

அவரை இடைமறித்து என்னங்க நீங்க பசங்களுக்கு தனியா போறாங்க நீங்க துணைக்கு போயிட்டு வாங்க என்றால், அதை ஏற்கவே முடியாது என்பதாய் நின்றான் ஆறுமுகம்,

மணி நேரமாய் விவாதித்து ஆறுமுகத்தை சம்மதிக்க வைத்தால் முத்துலட்சுமி

முடிவாகிவிட்டது வண்டி புறப்பட தயாரானது
முத்து லட்சுமி மட்டும் போகவில்லை மற்றவர்கள்
இருக்கையில் அமர வண்டி கிளம்பியது ஆறுமுகம் கனத்த இதயத்தோடு முன் இருக்கையில் அமர்ந்திருந்தார்,

புன்னகையோடு பத்திரமாக போயிட்டு வாங்க என்று கையசைத்து அனுப்பிவிட்டு வண்டி போகும் திசையை பார்த்து மனதுக்குள் கடவுளை பிரார்த்தனை செய்தால் ராமேஸ்வர பகவானே என் பிள்ளைகள் நல்லபடியாக சென்று வரவேண்டும் என்று

எழுதியவர் : Amirthaa (24-Jan-14, 5:41 pm)
சேர்த்தது : அமிர்தா
Tanglish : ammaavin aasai
பார்வை : 476

மேலே