கனவுகளை களவாடியவளே
கண்கள் வழி காதல் தந்தாய்...
ஏனோ என் கனவுகளை களவு செய்தாய்...
என் தேவதையே உனக்காக தானே...
எழுதினேன் இக்கவிதையை நானே...
கண்களை மூடிட,
என் கனவில் நீ வந்து செல்ல,
இரவுகளும் இனிமையாய் திகழ்ந்திட,
விடியலும் வெறுப்பாய் மாறிட....
இரவினில் தனிமையில்
உன் நினைவு கனவாய் வர....
கனவுகளுக்கு வடிவம் தர நினைத்து
துணைக்கு எழுத்துக்களை அழைத்துக்கொண்டு எழுதுகிறேன்,
என் எழுத்தும் கவிதையாயின,
உனக்காக என்னும் போது...!
சினுங்கினேன் பெண்ணே...
சிதைகிறேன் உன் சிரிப்பினை கண்டு...!
நெருங்கினேன் பெண்ணே...
உன்மேல் காதல் கொண்டு...!
உன்னை தொடுவதாய் கனவு கண்டு...
தொலைகிறேன் தொலைவில் நின்று...!
யோசித்து உன்னிடம் யாசித்தேன்...
அன்பை உன் அருகில் நின்று....!
கிறுக்கினேன் கசக்கி எறிந்தேன்...
பல கவிதைகள் உன் அழகை கண்டு...!
என் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அர்த்தம் தந்து..
வீசினாய் ஒரு பார்வை என்மேல் இன்று...
வியக்கிறேன் நான் உன்னை கண்டு...!
முதல் எழுத்தாய் உன்னை கொண்டு...
தொடங்கினேன் என் வாழ்க்கையை இன்று...!
எறும்பு ஒன்று கடித்திட,
கனவுகள் கலைந்திட கோபம் கொண்டேன்,
கனவுகள் கொண்ட நிமிடம் மட்டும்
நினைக்குதே எந்தன் இதயம்....
நிலைக்குமோ இந்த நிமிடம்
என் வாழ்க்கை முழுதும்...!
இக்கனவு நிஜமாக தேவை இல்லை...
கனவாகவே கலையாமல்
என் கருவிழிகளில் இருந்தால் போதும்....
கடந்து விடுவேன் காலத்தினை...
இக்கனவினை கொண்டு....!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
