காதல் விட்டேன்
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் அருவியிலே
கை நனைக்க
விரும்பி விட்டேன்
சாரல் பட்டவுடன்
எனை மறந்து
நின்று விட்டேன்
கற்பனையில் அடியெடுக்க
கால் வழுக்கி
விழுந்து விட்டேன்
கடலெனவே அறியாது
முற்றிலுமாய்
மூழ்கி விட்டேன்
பெண்மை யெனும்
உண்மை யினால்
உலகினையே மறந்துவிட்டேன்
இன்பமென்னும் அலைதனிலே
முழுவதுமாய்
நனைந்து விட்டேன்
அவளுடனே வந்திடவே
புதுப் பயணம்
தொடர்ந்து விட்டேன்
கடல்கடந்து கரைதொடவே
முழு மனதாய்
முனைந்து விட்டேன்
மணமுடித்து அவள்கரத்தை
அன்புடனே
பிடித்து விட்டேன்
இல்லறமாம் நல்லறமாய்
மாற்ற; வெறுங்
காதல் விட்டேன்
அவள் காதலனாய்
மட்டு மின்றி
உயிர்த்துணையாய் மாறிவிட்டேன்