கடிதம்

காற்றே உனக்கொரு
கடிதம்!
காதலில் இதுவொரு
புதுவிதம்!

காற்றே நீ கொஞ்சம்
தென்றலாய் வீசு
என்னவள் இதமாய்
தூங்கிடவே!

வெட்கையாக இருக்கும்போது
வீசாமல் இருந்துவிடாதே!
என்னவளின் சக்தியெல்லாம்
வியர்வையிலே பறிபோகும்!

கடுமையாய் வீசி
புயலாகிவிடாதே,
என்னவள் சினங்கொண்டால்
உன்னையும் தோற்கடிப்பாள்!

எழுதியவர் : உமர்ஷெரிப் (27-Jan-14, 1:10 pm)
சேர்த்தது : உமர்
Tanglish : kaditham
பார்வை : 1182

மேலே