என்னவளுக்காக ஆசை
என்னவளே!
உன்னை மணமுடிக்கும் நாள் எதுவோ
உன்னுடன் வாழ அசைகள் நூறு
காலையில்
என்னவள் எழுந்ததும்
தேநீர் கொடுக்க ஆசை,
நீராடி வந்தவுடன்
தலை துவட்டி விட
ஆசை
அவள் கூந்தல்
கோதி சிக்கெடுக்க
ஆசை
அவள் கரங்களுக்கு
வர்ணம் பூச
ஆசை
என்னவளுக்கு
காலை சிற்றுண்டி
நான் ஊட்டி விட
ஆசை
இருசக்கர வாகனத்தில்
பின்புறம் அமரவைத்து
ஊரெல்லாம் சுற்றிவர
ஆசை
என்னவளுக்கு
சிறுகாயம் என்றால்
நான் துடிதுடித்து போக
ஆசை
என்னவளே!
நம்பிள்ளையை சுமக்கும்
உன்னை
நான் சுமக்க ஆசை
இன்னும் என்ன சொல்ல
என்னவளுக்கு நான்
சிறுபிள்ளையாக
ஆசை
ஆசை ஆசை ஆசை ....
வரும் என்னவளுக்கு
என்னையே தர
ஆசை!
என்றும் உன்வரவுகாக
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த