மரண வாக்குமூலம் - அமிர்தா
![](https://eluthu.com/images/loading.gif)
அவன் மனிதனென்று தெரியாது
எதிரியுமல்ல எனக்கு அவன்
எனை காக்க நினைத்தே
தாக்கினேன் - ( அல்ல எனைக் காத்துக்கொண்டேன்)
மூன்றாம் நாளில் சுட்டுத் தள்ள முடிவு
ஆறாம் நாளில் என் மரணம் நிச்சயம்.
வாதாட வக்கீல் இல்லை,
வாய் பேச சாத்தியம் இல்லை
போர் கொடி தூக்க சங்கம் இல்லை
என் பக்க நியாயம் சொல்ல,
தற்காத்துக் கொண்டவனுக்கு
தூக்கு? -
கற்பு சூறையாடினால்
வயது வரம்பு வேண்டும் தண்டனைக்கு
லட்சங்களாய் கொன்று
குவித்து - பிணங்களின்
புழுக்கள் மீது ஏகாந்தமாய்
எக்களிக்கும் எவனுக்கும்
இங்கே கேள்விகள் கிடையாது
சிவப்பு கம்பள வரவேற்பு
திருப்பி கேட்க முடியாது என்றா?
சாலை மறியல் செய்ய ஆள் இல்லை என்றா?
இல்லை ஐந்து அறிவுதானே என்றா?
இதை செய்தீர்கள்?!
எங்களுக்கு மட்டும்தான் ஐந்து அறிவா?????
இனங்கள் அழியப்போவதில்லை
என் ஒருவனின் மரணத்தால்
என்றெண்ணிய - இதை
செய்தீர்கள்
எண்ணிக்கை குறையட்டும்
என்னை படம் பிடித்துக்கொள்ளுங்கள்
உங்கள் சந்ததிக்கு காட்டிக்கொள்ள
மரணத்தின் விளிம்பில்
மன்றாடுகிறேன்
எவன் தவறு செய்தாலும்
எனக்கு போலவே தண்டனை கொடுங்கள்