எப்போது தான் புரியும்

கல்யாணப் பொருத்தம்
கச்சித்தமாகப் பார்த்துச் சொல்பவர்
என்று
காலம் காலமாய்
பெயரெடுத்தவர்
கல்யாண ராம ஜோசியர்.

எப்போதும்
காலையில் இருந்தே
கூட்டம் காத்திருக்கும் .

வெவ்வேறு ஊர்களில் இருந்தும்
விதம் விதமான மனிதர்கள் .

முன்பெல்லாம் எத்தனை கூட்டம்
இருந்தாலும் ஒருவர் மட்டும் தான் .
பார்ப்பார் .

இப்பொது
உதவிக்கு ஒருவர் உண்டு .

கருத்து வேறுபாட்டால்
கணவனைப் பிரிந்து வாழும்
மூத்த மகள் .

இரண்டு வருடங்களாய்த்
தாய் வீட்டில் .

எழுதியவர் : (27-Jan-14, 9:33 pm)
பார்வை : 372

சிறந்த கவிதைகள்

மேலே