என் ஆருயிர் அன்பே

நினைவில் பூத்த
மலரும் நீயே புது
நிலவாய்
உதித்த
புதுமையும்
நீயே...

கனவில் கரைந்த
கள்ளியும் நீயே புது
கவிதை
எழுதிட
செய்ததும்
நீயே...

மனம் உருகி
புலம்பிட செய்தவள்
நீயே புகழ் அழகை
அழகாய்
பெற்றவள்
நீயே...

கவலை பறந்திட
வந்தவள் நீயே மன
மகிழ்சிகள்
தந்திட
பிறந்தவள்
நீயே...

தனிமை நீக்கிட
நினைத்தவள் நீயே
எந்தன் தனிமை
போக்கிட
வந்தவள்
நீயே...

பழகும் பலவித
இலக்கணம் நீயே
சுவை தமிழில்
பேசிட
வைத்தவள்
நீயே...

துயரம் மறந்திட
அணைத்தவள் நியே
துணை அறியா
நினைவில்
நிறைந்தவள்
நியே...

எழுதியவர் : லெத்தீப் (27-Jan-14, 9:49 pm)
Tanglish : en aaruyir annpae
பார்வை : 109

மேலே