கொண்டு செல்லும் இனமோ

தடி எடுத்தவன் எல்லாம் வீரன் அல்ல
புத்தகம் ஏந்தியவன் எல்லாம் படித்தவன் அல்ல
வரிகள் எழுதினவன் எல்லாம் கவிஞன் அல்ல
பணம் வைத்திருப்பவன் எல்லாம் செல்வந்தன் அல்ல.

வீரம் என்பது செயலிலும் தேவையிலும் தெரியும்
படிப்பு என்பது புரிதலிலும் பழக்கத்திலும் அறியும்
கவிதை என்பது அழகிலும் சொல் ஓவியத்திலும் மிளிரும்
செல்வம் என்பது பயன்பாட்டிலும் பண்பிலும் தெளியும் .

குருட்டு தைரியமும் புரியாமல் படித்த லும்
பக்கத்தை நிரப்ப எழுததுலும் ,பணத்தை அடுக்குவதும்
காண்கிறோம் மிகுதியாக இன்று ஒரு நாளைப் போல
இவை கொண்டு செல்லும் இனமோ என்று நினைத்தால்
இவை கொண்டு விற்காத திறனே என்று கொள்வோமாக

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (28-Jan-14, 10:27 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 1123

மேலே