கல்வியின் மேம்பாடு காட்டு

நற்றமிற் சொற்சுவைக் கற்றுவை
==நற்றிற முற்றதிற் பற்றுவை
பற்றினை முற்றுமாய்க் கற்றுவை
==பெற்றதை மற்றவர் பற்றவை
குற்றுயி றுற்றிடு முற்றமிழ்
==கொற்றவை ஏற்பதற் குற்றுவை
வற்றிட லற்றநற் ரூற்றுவை
==விற்றுவின் நாட்டினி லூற்றிவை.

சிற்றிடைச் சுற்றலை எட்டவை
==சற்றதன் பற்றினை முற்றுவை
சிற்றுளி பட்டநற் கற்களின்
==சிற்பமாய் கற்றதை நிற்கவை
அற்புத மட்சரங் கற்பதை
==அர்ப்பணிப் புற்றுநீ ஏற்றுவை
உற்றவர் அற்றவர் மற்றவர்
==உற்றுனை போற்றிட வெற்றிவை.

முற்றிய நெற்றினுட் வித்து
==முற்றுகை யிற்றுமண் பற்றியே
வெற்றிட மற்றிட நிலத்தில்
==விருட்சமாய் நிற்கவே கற்கும்
அற்புதக் கற்கைக் காசான்
==அவனியி லற்றது ணர்ந்து
கற்றபின் சிற்றெறும் பாட்டம்
==காட்டிடு கல்வியி நூற்றம்!


விற்று - கல்விவன்மை
ஊற்றம் -மேம்பாடு

மெய்யன் நடராஜ் இலங்கை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Jan-14, 2:32 am)
பார்வை : 554

மேலே