வாய் பேசுபவனும் ,வாய் பேசாதவையும்

விலங்குக்கும், பறவைக்கும்
இருக்கும் ஒழுக்கம்
மனிதனிடம் காணவில்லை
இருக்கும் ஒழுங்கு முறை
மனிதனிடம் இல்லவே இல்லை.
இருக்கும் பற்றும் பாசமும்
மனிதனிடம் இல்லை
இருக்கும் ஒற்றுமையும் ,
உணர்ச்சியும் மனிதனிடம்
காண முடியவில்லை.
இல்லாத கோபமும், ஆத்திரமும்
காண்கிறோம் நிறையவே
இல்லாத பொறாமை
இருக்கிறது மிகுதியாக
இல்லாத கபடும், கசடும்
காண முடியும் ஏராள மாகவே
வாய் பேசுபவனும் ,வாய் பேசாதவையும்
அரங்குக்கு வந்தால் ,போட்டிக்கு நின்றால்
மனிதன் மேலா என்று நினைக்கும்போது
தோன்றுவது எளிதில்
மிருகமும் , பறவையும்
பல அடி மேலே.

எழுதியவர் : மீ னா சோமசுந்தரம் (27-Jan-14, 8:38 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 1303

மேலே