குழந்தைப் பாட்டு

அழகுத் தமிழ் சொல்லெடுத்து
வாழ்த்திடவே ஆசை கொண்டேன்

மழலை உன்னை தூங்க வைக்க
மல்லிகையில் மெத்தை செய்வேன்

உறங்கச் சொல்லி தாலாட்ட
கம்பன் அவன் பாட்டெடுப்பேன்

மன்னன் உன்னை குளிப்பாட்ட
கங்கை தனில் நீரெடுப்பென்

அன்னப்பறவை இறகெடுத்து
கன்னமதில் பொட்டிடுவேன்

உயிரே உனக்குடையமைக்க
மயில் தோகை சிறகெடுப்பேன்

நட்சத்திரங்கள் கொண்டு வந்து
வழித்தடத்தில் ஒட்டிடுவேன்

ஆள் கடல் முத்தெடுத்து
கழுத்தினில் தொடுத்திடுவேன்

கண்ணுக்குள் படமெடுத்து
நெஞ்சுக்குள் மாட்டிக்கொள்வேன்

உன்கையை பற்றிக்கொண்டு
ஊர்முழுதும் சுற்றப் போவேன்

வானவில்லை வலைத்தமைத்து
நாணமின்றி குடை பிடிப்பேன்

உன்மனம் விரும்பா எந்தன் குணங்கள்
உடனடியாய் மாற்றிக்கொள்வேன்

எழுதியவர் : பெருமாள் (27-Jan-14, 12:54 pm)
சேர்த்தது : பெருமாள்
Tanglish : kuznthaip paattu
பார்வை : 496

மேலே