ஆதங்கம்
நான் சொல்வது
"சரி" என்று சொல்ல
ஒரு
தலையாட்டி பொம்மை .
நான் சொல்வது
"தவறு" என்று
பொறுமையாய் என்னுடன்
விவாதிக்க
ஒரு
தலையாட்டி பொம்மை.
நானும்
என் பொம்மைகளும்
அழுவதற்கு ......
கொஞ்சம்
தனிமையும்
தேவை .
- லக்ஷ்மி பாலா