சகோதரர்கள்

சகோதரர்கள்
நாங்கள் இருவரும்
ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் ;

எனக்கும் அவனுக்கும்
இருவேறு நிறங்கள் ;

எங்களுக்குள் எப்போதும்
கருத்து வேறுபாடு தான்;

எங்கள் சண்டைக்கு
நாங்களே சமாதான கொடி
காட்டிகொள்வோம் ;

என்னை தலையில்
தூக்கிவைத்து கொண்டாடுவார்கள் -
அவனையோ தூற்றி எறிவார்கள்;

என்னை அடைவதற்கு
அவனே வழிகாட்டி ;
வழியை அறியாமல்
எனக்காக போராடுவோர்
அவனை மட்டுமே அடைவார்கள் ;

என்னை அடைந்த யாரும்
அவனை மறப்பதில்லை ;

என்னை இவர்கள்
பெறுவதற்கு அவன் இறக்கிறான் ;
நாங்கள் இருவரும் தான்
வெற்றியும் தோல்வியும் ;

எழுதியவர் : priyan (29-Jan-14, 2:51 am)
பார்வை : 2580

மேலே