பயனேதும் இல்லை
உலகையே மனிதன்
உரிதாக்கிக்
கொண்டாலும்
உறவுகள்
இல்லையேல்
பயனேதும் இல்லை!
நாட்டையே அவன்
நன்றாக ஆண்டாலும்
நண்பன் இல்லையேல்
பயனேதும் இல்லை!
கோட்டை கட்டி
கோபுரத்தில் வாழ்ந்தாலும்
ஒரு கோலமயில் துணையின்றி
பயனேதும் இல்லை!
ஆயிரம் செல்வங்களால்
ஆதிக்கம் செலுத்தினாலும்
அன்பொன்று இல்லையேல்
பயனேதும் இல்லை!....