இதுவும் ஓர் அனுபவம்

உயிர் தோழியின்
திருமண மேடையது ,
வாய் நிறைய வாழ்த்துக்களுடனும்
கை நிறைய பூக்களுடனும்
மேடையை நோக்கிச் சென்றேன்
கண்டவுடன் கட்டியணைத்தாள்
புகைப்படம் எடுக்கும் தருணம் அது
வழமை போல் கையை பிடித்துக்கொண்டாள்
மெதுவாக அவளது கையை மணமகன்
எடுத்து தன் கையுடன் இணைத்துக் கொண்டார்
எனக்கு அப்போது கவலை தெரிய வில்லை
வெளியே வந்தவுடன் தான் புரிந்துக்கொண்டேன் நட்பின் விரிசல் பாதை திறக்கப்பட்டு விட்டது என்று
இதுவும் ஓர் அனுபவமே.
வேதனை மிகுந்த அனுபவம் .