என் ரஞ்சினிகுட்டி

என் ரஞ்சினிகுட்டி மழைநீரில் விடும் கப்பலை கவிழாமல் பார்த்துகொள்கிறார்....
கடவுள்.....
_______________
என் ரஞ்சினிகுட்டி சாப்பிடும் பொழுது சிந்துகின்ற சோற்று பருக்கைகள்,
நட்சத்திரங்கள் ......
_______________
என் ரஞ்சினிகுட்டி வாயில் சூப்பும் விரலை
நான் எடுத்துவிடும் போதெல்லாம் கோபப்படுகிறார்
"கடவுள்" !
_______________
கடவுள் என்னிடம் "வரம்" கேட்கிறார்,
தினமும் என் ரஞ்சினிகுட்டியை கோவிலுக்கு அழைத்துவர சொல்லி !!!
_______________
புதிதாக வாங்கிக்கொடுத்த பொம்மையை,
பேசாத குழந்தை என்று
நினைக்கிறாள் என் ரஞ்சினிகுட்டி...
பொம்மையோ,
என் ரஞ்சினிகுட்டியை பேசும் பொம்மை என்று நினைக்கிறது...
_______________
என் ரஞ்சினிகுட்டி பேசுவதை கேட்க கேட்க எனக்கும் ஆசையாய் இருக்கிறது.....
மீண்டும் மழலையாய் பிறக்க.....
________________
தந்தைக்குள்ளும் தாய்மை ஒளிந்திருப்பதை உணர்ந்தேன் ...
என் ரஞ்சினிகுட்டி என்னை தவறுதலாக "அம்மா" என்று அழைத்தபோது !!!
_______________
Matt Molloy யின் குழலும்,
Sergei Rachmaninov யின் பியானோவும் தோற்றது.....
என் ரஞ்சினிகுட்டி தன் மழலை மொழியால் என்னை "அப்பா" என்று அழைத்தபோது.......
_______________
ரஞ்சினிகுட்டி என் விரல் பிடித்து நடக்கிறாள்....
நான் அவள் உலகத்தை பிடித்து நடக்கிறேன் !!!
______________
உலகத்துல ஒரே மாறி 7 பேரு இருப்பாங்கனு சொன்னியே,
மத்த 6 பேருக்கும் எப்போ அப்பா "ஹாப்பி பர்த்டே?"........
-என் ரஞ்சினிகுட்டின் கேள்வி.......
" குழந்தைகளின் கேள்விகள் கடவுளிடம் கேட்கப்பட வேண்டியவை.................."
______________
என் வீட்டு சுவற்றில் என் ரஞ்சினிகுட்டின் கிறுக்கல்கள்......
- "கடவுளின் கையெழுத்து"
______________
என் ரஞ்சினிகுட்டி தன் பிஞ்சு விரலை நீட்டி "கொன்னு"
என்று சொல்லும்போது , அவள் விரல் நுனியில் இருந்து குதித்து
"கொலை" கூட "தற்கொலை" செய்து கொள்ளும்.......
_____________