ஆபாசப்படம் பார்த்து சிறுமிகளை பலாத்காரப்படுத்தும் கடாபியின் அதிர்ச்சிக் காட்சிகள் அம்பலம்

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான கடாபி சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அவர்களை தனது பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார் என்று பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி. -4 தொலைக்காட்சி புதிய ஆவணபடத்தை வெளியிட்டுள்ளது.

கடாபியின் இரகசிய உலகம்” ‘Gaddafi’s Secret World” என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் பெண்களை எப்படியெல்லாம் அவர் தவறாகப் பயன்படுத்தினார், எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டார் என்பதை விளக்கியுள்ளனர்.

வடக்கு ஆபிரிக்கா நாடான லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கடாபி கடந்த 2011ம் ஆண்டு கிளர்ச்சி படையினரால் கொல்லப்பட்டார்.

கடாபி ஆட்சியின்போது நூற்றுக்கணக்கான சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அவர்களை தனது பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி தொந்தரவு செய்துள்ளார் என்று புதிய தகவலை நியூ பி.பி.சி. 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கடாபி இறந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடாபியின் உத்தரவின்படியே பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்து உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்காகவே தனியாக ஒரு பண்ணை இல்லத்தை வைத்திருந்துள்ளார். அதில் இருந்த இரு அறைகள்தான் மிக மோசமானவை. அதில் ஒரு அறையானது, கடாபியிடம் சிக்கும் பெண்களை கொடூரமாக பலாத்காரம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆபாசப் படம் பார்த்துக் கொண்டே இந்த அறையில் வைத்துத்தான் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை ஆபாசப் படம் பார்த்துக் கொண்டே சித்திரவதை செய்வதோடு அவர்களையும் ஆபாசப் படங்களைப் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்துவாராம்.

மேலும் தன்னால் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்காக தனியாக ஒரு அறையை காணப்பட்டுள்ளது. இந்த அறையில்தான் பெண்களுக்கு பாலியல் நோய்கள் இருக்கின்றனவா என்ற சோதனையும் நடத்தப்படும். எல்லாம் சரியாக இருந்தால்தான் அவர்களை கடாபி அறைக்கு அனுப்பி வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து தப்பிப் போகும் பெண்களை அவர்களது குடும்பத்தினர் ஏற்காமல் விரட்டியடித்து விடுவதால் அவர்கள் கடைசியில் தற்கொலை முடிவை நாடும் அவலம் நேரிடும் நிலை ஏற்படும்.

மேலும் தன்னால் பலாத்காரக் கொடுமைக்குள்ளான பெண்களை இனியும் பயன்படுத்த முடியாது என்ற நிலைக்கு வரும்போது அவர்களை கார் பார்க்கிங்கிலும், எங்காவது குப்பை மேட்டிலும் கொண்டு போய் தூக்கி வீசி விடுமாறு உத்தரவிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வாதிகாரி மறைவிடத்தில் இருந்து தப்பிய பெண்ணின் மூலம் இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது. மகளிர் உறுப்புகளுடன் கூடிய அறையிருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பாலியல் அடிமைகள் என்று கூறப்படும் சிறுமிகள் பால்வினை சம்பந்தமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்கு கருக்கலைப்பு நடத்தப்பட்டுள்ளது.

பல பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, கொடுமை படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. கடாபிடம் இருந்து தப்பித்த பெண்ணிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் கடாபின் பெண் காவலரால் தான் குகைக்குள் தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பெண் கட்டாயமாக ஆடைகள் கலையப்பட்டு, வெளி சொல்ல முடியாத இன்னல்களை சந்தித்து கடாபி காத்திருந்த படுக்கையில் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த ஆவணப்படம் ‘கடாபியின் சீக்ரெட் உலகம்” என்ற பெயரில் கடாபியின் உலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் எடுத்த பேட்டியின் மூலம் பெப்ரவரி 3அம் திகதி பிபிசி4 தொலைகாட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதாரம்- ஜே.வி.பி செய்தி (இணையத்தள செய்தி)

எழுதியவர் : (29-Jan-14, 5:31 pm)
சேர்த்தது : kalai Barathi
பார்வை : 162

சிறந்த கட்டுரைகள்

மேலே