கண்டிப்பாக படிக்க வேண்டியது

தமிழ் மொழியின் தோற்றம் குறித்து ஒரு சின்ன உதாரணம்

தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை.

ஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது.

தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்.

திருக்குறள் – ஏன் என்றால், தமிழ் என்று சொன்ன உடனே நம்ம ஞாபகத்திற்கு வருவது அதுதானே.

திருக்குறள் கி.மு.31-ல் தமிழ்கடைசங்கத்தில்அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசி சங்கம்.

அந்த கடைசி சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும்.?!?!? !?

திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார்.

ஆனால், தொல்காப்பியரோஅகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார்.

அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர்.

தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும்,

இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும்.

அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.

இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார ்கள் என்பதே,

ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது.

அவர்கள் மொழியை உருவாக்கியிருக்கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக் கின்றனர்.

நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று. !!!

எழுதியவர் : முரளிதரன் (29-Jan-14, 6:31 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 118

மேலே