சுகமான ராகம்

தேடும் போதெல்லாம்
தொலைந்து போகின்றாய்..!
தீண்டும் போதெல்லாம்
உடைந்து போகின்றாய்..!!
வார்த்தைகள் இருந்தும்
மௌனமாக்கினாய்..!!
நான் மௌனமாக இருந்தும்
உன் நினைவுகள் என்னை
மீட்டி பார்க்கிறதே...
உன் நினைவுகளின் ஓசைகளில்
என் மௌனம் கலைகின்றதே..!!!

பிரியன்

எழுதியவர் : (29-Jan-14, 5:50 pm)
சேர்த்தது : அசோக் பிரியன்
Tanglish : sugamaana raagam
பார்வை : 59

மேலே