மரியாதை

மரியாதை
========

ஒரு சர்வாதிகாரி தன் பிறந்த நாளில் தன் படம் பொறித்த தபால் தலைகளை ஏராளமாக வெளியிட்டார். ஆனால் அந்த தபால் தலைகள் அதிகம் விற்பனை ஆகவில்லை.

தனது செயலாளரை அழைத்து காரணம் கேட்டார். அதற்க்கு செயலாளர் கூறினார், ''அந்த தபால் தலைகள் சரியாக ஒட்டவில்லை. அதனால்தான் சரியான விற்பனை இல்லை,'' என்று,

சர்வாதிகாரிக்குக் கோபம் வந்தது.
உடனே தபால் நிர்வாகியை அழைத்து, ''ஒழுங்காகக் கோந்து பூசப்பட்டிருந்தால் ஓட்டுவதில் சிரமம் இருக்காதே? ஏன் அதை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை?' 'என்று கேட்டார்.

நிர்வாகி சொன்னார், ''கோந்து சரியாகத்தான் பூசப்பட்டிருக்கிறது. ஆனால் எச்சில் உமிழ்ந்தவர்கள் கோந்து இருந்த பக்கத்தில் உமிழவில்லை.''

எழுதியவர் : முரளிதரன் (29-Jan-14, 6:10 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : mariyaathai
பார்வை : 94

சிறந்த நகைச்சுவைகள்

மேலே