டாஸ்மாக்-இது மூடர்கூடம் அல்ல

இங்கே
கவிதையில்
காவியம் பாடும்
கவிஞனைக் கண்டேன்

திரைக்கதை-எழுத்து-இயக்கம்
எல்லாவுமாய் இருக்கின்ற
சினிமாவாதியைக் கண்டேன்

இங்கே
தத்துவம் பேசும்
சாக்ரடிசையும்
கண்டேன்.......கண்டேன்

ஒவ்வொரு வினைக்கும்
ஓர் எதிர்வினை உண்டு
என்றுரைத்த
அறிவியலாரையும்
கண்டேன்.......கண்டேன்

இங்கே
எல்லாவுமாய் இருக்கும்
எல்லோரையும் கண்டேன்

ஆனால்

மனிதனைக் காணவில்லை

டாஸ்மாக் மதுக்கூடம்
இது மூடர்கூடம் அல்ல

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (29-Jan-14, 7:23 pm)
பார்வை : 423

மேலே