காலம்

புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது
மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான்

மீனுக்கு சிக்கியது புழு
மனிதனுக்கு சிக்கியது மீன்

புழுவிற்கு ? ? ? ?

ஆனாலும் காத்திருந்தது புழு
மனிதன் மண்ணுக்குள் வரும் வரை

எழுதியவர் : முரளிதரன் (29-Jan-14, 8:18 pm)
Tanglish : kaalam
பார்வை : 87

மேலே