மாப்பிள்ளை ஊர்வலம்

குடை பிடித்து, மனைவி இடைபிடித்து
வாறார் மாப்பிள்ளை!
குதிரை வண்டியிலே மனைவி சிறை பிடிக்க
வாறார் மாப்பிள்ளை!
பட்டாசு வெடிவெடிக்க பூ மழையும் தான்பொழிய
வாறார் மாப்பிள்ளை
குரவைச் சத்தம் சேர்ந்தொலிக்க தனைமறந்து
வாறார் மாப்பிள்ளை!
சுதந்நிரனாய் திரிந்தவனை கால் கட்டு
போட்டு வைக்க
அழைத்து வாறார் ஊர்வலமாய் - பாவம்
அவன் என் செய்வான்?
பலியிடவே கொண்டு வரும் வௌ்ளை
ஆட்டைப்போல்
அலங்கரித்தே கொண்டு வாறார் - ஒன்றும்
அறியா வெகுளி அவன்!
உள்ளமதில் கனவுகளும்
இளமையின் எதிர்பார்ப்பும்
ஆ்ண் பிள்ளை தோரணையும் - முன்னிற்க
இணைகின்றான் பந்தத்தில்!