காதல் கவிப் பித்தன்

கவிஞனும் காதலனும்
கலங்கு நெஞ்சப் பித்தனுமே
கண்ணுறக்கம் கொள்ளார் என
கழறினான் ஒரு கவிஞன்*.


அத்வைதக் கூற்றுப்படி
ஒன்றில் பலவும்
பலவற்றில் ஒன்றும் உண்டு.

கவிஞனும் பித்தனும்
தவித்திடும் காதலனும்
ஒன்றிணைந்து இருப்பதால்

கண்டதைக் காதலித்து
கவியாக்கித் தருகிறான்;
கருத்தொன்று துளிர் விட்டால்
கண்ணுறங்க மறுக்கிறான்
பித்தனாய்ப் போகிறான்
அதை வடித்துக் கொடுக்கும் வரை.













“The lunatic, the lover, and the poet, are of imagination all compact.”
― William Shakespeare, A Midsummer Night's Dream
* Shakespeare (26 ஏப்ரல் 1564 – 23 ஏபரல் 1616) ஒரு ஆங்கில நாடக ஆசிரியர் என்று தான் பெரும்பாலோர்க்குத் தெரியும். அவர் சிறந்த கவிஞரும் ஆவார். அவரது நாடகங்கள் பலவற்றில் நல்ல கவிதைகளும் உள்ளன. அவரது நாடகம் ஒன்றில் வரும் கவிதை ஒன்றை (Sigh no more, ladies”) ”பெருமூச்சு விடவேண்டாம்” (146741) என்ற தலைப்பில் மொழி பெயர்த்து எழுத்தில் வெளியிட்டுள்ளேன். அவர் தனது 37 நாடகங்களையும் எழுதாமல் போயிருந்தால்கூட ( Sonnet எனப்படும்)தனது 154 பதினான்கு வரிக் கவிதைகளுக்காக காலத்தை வென்று நிற்பார்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (1-Feb-14, 12:02 pm)
பார்வை : 66

மேலே