வன்முறை அல்லது அப்பாவி

கணவன் மனைவி சண்டை
வெகு நேர வாக்குவாதம்
ஓயா தொல்லை அண்டை வீட்டார்க்கு

பிள்ளைகள் பள்ளிப்பாடம் படிக்க முடியவில்லை
வீட்டு வாசலை தேடி வந்தவர்கள் அனைவரும் திரும்பி செல்கின்றனர்

கேட்க ஆளில்லை
இதென்னடா வம்பா போச்சு தமிழ் நாட்டுல என்று எழுந்தான் ஒரு ஆம்பிள்ளை

அவன் செல்லும் முன் பளார் என்று சத்தம்
ரெத்தம் துடிதவனாய் சென்று அந்த வீட்டின் ஆண் மகனைப் பார்த்து ஆரம்பித்தான் சொற்பொழிவை

பெண்கள் நாட்டின் கண்கள்
மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையை கொளுத்துவோம்
என்றெல்லாம் அடுக்கிக் கொண்டு போனான்

அவனுக்கும் உலுந்தது பளார் என்றொரு அறை
பிறகுதான் தெரிந்தது முதலிலிருந்தே அறைந்தது
பெண் தான் என்று


பெண்கள் நாட்டின் கண்கள்

எழுதியவர் : இஸ்மாயில் (1-Feb-14, 2:42 pm)
சேர்த்தது : இஸ்மாயில் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : vanmurai
பார்வை : 586

மேலே