நானொரு காதல் கவிஞன்
அரை தளர்ந்து
ஆளொடுங்கி
நரையுதிர்ந்து
நரம்படங்கி
என்புருகி
எல்லாம் செத்த பின்பு
சாற்றி வைக்கப்பட்ட
சவம் என்னைக்
கன்னியர் கடப்பின்
கடைக் கண்ணுருளும்
கட்டை
எழுந்து நிற்க எத்தனிக்கும்
கரம் உயிர்த்து
எழுதுகோல் தேடும்
செத்த சவம் என்னில்
சாகாக் கவி பிறக்கும்
இருப்பினும்
அந்திமக் காலத்திலாவது
மனிதனாக மாளவிடுங்கள்
மண்ணின் அழகியரே !