வண்ணங்களே வாழ்வின் வசந்தங்கள்

​வண்ணமிகு மலர்களின் தோட்டமா
வசந்தமிகு நெஞ்சங்களின் கூட்டமா ​!
வானவில்லே வந்திங்கே அமர்ந்ததா
வர்ணமிகு ஆடைகளின் அணிவகுப்பா !

​பசுமை போர்வையில் பலநிற பூக்கள்
​பலவண்ண கலவையின் சிதறல்கள் !
பார்வையால் ஈர்த்திடும் உருவங்கள்
பாதையில் உள்ள வண்ண முகங்கள் !

வண்ணங்களே வாழ்வின் வசந்தங்கள்
எண்ணங்களே என்றும் வழிகாட்டிகள்
வகுத்திடுங்கள் வாழ்வை வண்ணத்தால்
வாழ்ந்திடுங்கள் ஏற்றமிகு எண்ணத்தால் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Feb-14, 11:09 pm)
பார்வை : 111

மேலே