மந்திர கோல்கள்
தொலைந்து போன
என்னை தேடி
வெற்றிலையில் மை தடவி
பார்க்க வேண்டாம்
அன்பே
உன் விழி மையில் தான் தொலைந்து போனேன் நானென்றால் நம்புவாயோ?
நீ மாயக்காரியோ இல்லையோ
உன் கண்கள் மந்திர கோல்கள் தான்
எப்படி என்னை
ஆட்டுவிக்கின்றன
அவற்றின் விருப்பம் போல்
விரும்பினால் மறைய செய்யும்
மந்திரம் இது .
சூ மந்திர காளி இல்லை
இவள் மந்திர காதலி .