விடியல் தேடும் மின்மினிகள்

சின்ன, சின்ன கிளியே!
சேதி சொல்லும் கிளியே!
ஓடி வந்து நில்லு,
நா சொல்லும் பாட்ட கேளு!

புதுச் சட்டை போட்டுக்கிட்டு,
புத்தகத்த தூக்கிக்கிட்டு,
பள்ளிக்கூடம் போகணும்- நா
பள்ளிக்கூடம் போகணும்- ஆனா

பாரு என் அதிர்ஷ்டம்!

தீக்குச்சி அடுக்கி வாழுறேன்!!

வீட்டு வேல செஞ்சு சகறேன்!!

சின்ன சின்ன கிளியே
சேதி சொல்லும் கிளியே
ஓடி வந்து நில்லு
நா சொல்லும் பாட்ட கேளு!

மணி மணியா தமிழ்ப்பாட்டு பாடனும்
நூத்தூக்கு நூறு கணிதத்துல வாங்கணும்
அயல் மொழி ஆங்கிலமும் கற்கணும்
அறிவியல் மேதையாக மாறனும்- ஆனா

பாரு என் அதிர்ஷ்டம்!

தீக்குச்சி அடுக்கி வாழுறேன்!!

வீட்டு வேல செஞ்சு சகறேன்!!

சின்ன சின்ன கிளியே
சேதி சொல்லும் கிளியே
ஓடி வந்து நில்லு
நா சொல்லும் பாட்ட கேளு!

எழுதுகோல் புடிச்சு பரிட்சை
எழுதிட நெ னச்சேன்
பார் புகழ பட்டம்
வாங்கிட துடிச்சேன்- ஆனா

பாரு என் அதிர்ஷ்டம்!

தீக்குச்சி அடுக்கி வாழுறேன்!!

வீட்டு வேல செஞ்சு சகறேன்!!

சின்ன சின்ன கிளியே
சேதி சொல்லும் கிளியே
ஓடி வந்து நில்லு
நா சொல்லும் பாட்ட கேளு!

கொள்ளை அடிச்சேனோ- கொல
பாதகம் பண்ணுனேனோ முன் சென்மத்துல
வறுமையில பொறந்த பாவம்
இளவயசுல வாட்டுது என்ன நாளும்

விளக்க தேடிப் பறக்குறேன் விட்டில் பூச்சியா.....

வீட்டுக்கு ஒளியும் தாரேன் மின்மினி பூச்சியா......

வருமா??????

"என் வாழ்க்கையில விடியலுந்தா?????????"

தருமா??????

"""""நா ஆச பட்ட படிப்பையும்ந்தா""""

எழுதியவர் : சக்தி பாரதி (3-Feb-14, 6:43 pm)
பார்வை : 1211

மேலே