கொக்கு துரை

கொக்கு துரை

வில்லின் நாண் போன்ற நெடிய குமுளி சாலையில் பயணம்
சொல்லின் பேர் போன வழிவிடு முருகன் கோயில் தரிசனம்

இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளின் நடுவே பாருங்கள்
செயற்கை எழில் கெஞ்சும் கல்யாண வரவேற்பு பேனர்கள்

உற்றார் உறவினரை வரவேற்கும் இல்லத்தார் படங்களுடன்
உற்றுப்பார்த்தபடி கோட்சூட் ஆங்கில கனவான் திருவுருவம்

ஊரெங்கும் பெயர்பலகைகள், காலண்டர்கள், சுவரொட்டிகள்
அவையெங்கும் நீக்கமற கர்னல் ஜான் பென்னிகுவிக் முகம்

முல்லை பெரியார் அணை கட்டிய சாதனையாளர் கல்வெட்டுடன்
எல்லையில் மணிமண்டபம் அருகே ஒரு மூதாட்டியின் சொல்வெட்டு

கொக்கு துரை சொந்த காசுல அணை கட்டி விட்ட தண்ணீர்
சொக்குதுல செழிப்பு எங்க ஊரெல்லாம் என்றதும் ஆனந்த கண்ணீர்

கிழக்கிந்திய கம்பெனியில் திறமையால் பேரெடுத்தது
கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கு இந்த பிறப்பில் பெருமை

பொக்கைவாய் பாட்டியின் மனதிற்குள் இடம்பிடித்தது
கொக்கு துரைக்கு ஏழ் பிறப்பிற்கும் நீங்கா பெருமை.

எழுதியவர் : karmugil (3-Feb-14, 7:05 pm)
சேர்த்தது : karmugil
பார்வை : 85

மேலே