வாழ்க்கை
வருடும் தென்றல் வசந்தகாலம்
வறட்டும் நாவை கோடை காலம்
குருக்கும் உடலை குளிர்காலம்
இயற்கையின் மாற்றம்!!
சிரிக்கும் பற்கள் குழந்தை பருவம்...
குழப்பம் நிறைந்தது இளமை பருவம்
தளரும் நடையும் முதுமை பருவம்
வாழ்க்கையின் மாற்றம்!!
முளைக்கும் ஆசை!முறுக்கு மீசை
பருவமங்கை கொலுசின் ஒலிகள்...!
திறக்காத மனது திறக்கும் கதவு
பிறக்கும் காதல்
மாற்றும் அறிவை!! கூட்டும் அழகை!!
இடைபட்டகாலம் !!
துன்புற்று பின் இன்புற்றிருப்பது
இதுவே வாழ்க்கை!!்