இறைவனிடம் ஒரு வரம்
இறைவா நீ இறங்கி வா
இரக்கமற்ற மனிதர்களுடன்
இணைந்து வாழ்ந்துப் பார்.
இறந்து விடுவாய்.- இல்லையேல்
இவர்களது
இறப்பு புத்தகத்தைப் புரட்டுவாய்
உன்னால் படைக்கப்பட்ட நாங்கள் உன்னையே
உடைக்கப் பார்க்கின்றோம் - ஏன் தெரியுமா?
உனக்காக சூடம் ஏற்றிப் பார்த்துவிட்டோம்
உன்னிடமும் தயவு தொலைந்துப் போனது.
உன்னையேகடத்தவும்செய்கின்றோம்-ஏன்தெரியுமா - கடல் கடந்து நீ சென்றாலும்
எங்களது ஆன்மா நிறைவுப் பெறுமா என்று?
எங்களை நீ சிர்ப்பியாகவும் பிறக்கவைத்தாய்.
எதற்கு? - உன்னை சிலையாக வடிக்கவே.
சிலை வடிவில் உன்னை நாங்கள்
சிரம் தாழ்ந்து வணங்குகின்றோம்.
சிந்தைக்குள் நீ வந்து சிறைபடுவாய் என்று.
திருநீர் இல்லா நெற்றிப் பாழ் என்றாய்.
திருமன் இல்லா நெற்றிப் பாழ் என்றாய்.
திருநீர் இட்டோம்.திருமன் இட்டோம்.-நாங்கள்
திருந்தவில்லை. - உன்னிடம் இறை உணர்வைவிட
குறை உணர்வைத்தான் முன்வைக்கின்றோம்.
குறைகளை நீ களைந்தாலும் - நாங்கள்
குறைகளைவிட்டு விலகுவதே இல்லை.-ஆம்
அடுத்தவன் குடியைக் கெடுக்க என்ன வழி என்று
ஆண்டவனே உன்னிடம் வந்து வணங்குகிறோம்.
நீயும் எங்களை ஆதரித்து - சில
நல்ல வழிகளைக் காட்டுகின்றாய்.- அந்த
நல்ல வழிகளில் ஒன்று எங்களது சுயநலம்.
சுயநலத்தால் உன்னையே நாங்கள் கடத்துகிறோம்.
உன்னையேக் கடத்துவதால் - எங்களுக்கு
உற்சாகம் தான். - ஏனெனில் நீ கை மாறும்போது
உணர்வைத் தொடும் "பணம்" வருவதால்
உன்னையேஅடமானம்வைக்கவும்துணிகின்றோம்.
உன்னை அடமானம் வைத்தப் பின்
உள்ளுக்குள் பல ஆசைகள் விதைகின்றன.
ஆசைகள் விளைவதால் - அடுத்தவன் வாழ்வைப்
பற்றி நாங்கள் கவலைப் படுவதே இல்லை.
நாளடைவில் நாங்கள் இரக்கமற்றவனாய்
நடைப்போட்டு "தலைவனாய்":ஆகின்றோம்.
நீ மறக்கப்படுகின்றாய்.
நாங்கள் மதிக்கப்படுகின்றோம்.
மதிப்பும் மரியாதையும் கூடும் போது
மனிதன் என்பதை மறந்தே வாழ்கின்றோம்,.
உன்தேவலோகத்து அரக்கர்கள் - பூலோகத்தில்
உத்தம மனிதர்களாய் உருவெடுத்து விட்டனர்.
ரிஷிகளுக்கும்,யோகிகளுக்கும் அங்கே
ரணகாயங்கள் இனி இல்லை. - தேவலோக
கன்னியர்களை காணவில்லை என
கவலைப்படத் தேவையில்லை.- எல்லாம்
இங்கே நடக்குது. - இரக்கமற்ற அரக்கர்கள்
மனித வடிவில் இங்கே திரிவதால்
மனிதனுக்கு மனிதனால் மரண ஓலைகள்
மனுநீதியாக வழங்கப்படுகிறது.
மூன்று லோகம் உன் லோகம். - இங்கே
ஒரே லோகத்தில் முன்னூறு லோகம்.
ஒவ்வொரு லோகத்திலும் ஒரு தலைவன்.
ஒரு தலைவனுக்கு பல பக்திமான்கள்.
உன்னை சரண் அடைந்தால் வரம் தருவாய்.
இவர்களை சரண் அடைந்தால் சதியை அருள்வார்.
மனிதனும் தெய்வமாகலாம் என்பதை
மாற்றி தெய்வமும் மனிதனாகலாம் என்பதை
மேலுச்சுகின்றனர். - ஆம் - நித்தியக் கண்டம்
பூரண ஆயுசு. - இறைவா நீ இறங்கிவா
இணைந்து வாழ்ந்துப்பார். நீயே வருத்தப்படுவாய்.