காதலென்னும் சோலையினில்49
ராஜா குடும்பத்தினர் மற்றும் கவிதாவின் அப்பா அம்மா, சித்தப்பா குடும்பத்தினர் அனைவரும் புறப்பட்டு ராஜாவின் வீட்டிற்கு வந்தனர்.
திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் தயாராக எடுத்துவிட்டு அவர்களும் ராஜாவின் நெருங்கிய நண்பர்களும் முருகன் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.............
தாராவின் நண்பன் இங்கு நடப்பது அனைத்தையும் கண்காணித்துவிட்டு தாராவுக்கு தகவல் கொடுத்து அவளையும் வரவழைத்தான்.
கோவிலில் திருமண ஏற்பாடுகள் அற்புதமாக நண்பர்கள் உறவினர்கள் சூழ நடந்து கொண்டிருந்தது, பூஜாரி மந்திரம் சொல்ல ராஜாவும் கவிதாவும் மாலை மாற்றிக்கொண்டனர்...............
வந்தவர்கள் அனைவரும் வாழ்த்த கவிதாவின் கழுத்தில் தாலி கட்டினான் ராஜா.
இங்கு நடப்பது அனைத்தையும் தாராவும்,நண்பனும் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்,தாராவிற்கு இந்த செயல் தூக்கி வாரிப்போட்டது, அவள் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை!!!!!!!!!
திருமணம் இனிதே முடிய முன்கூட்டியே வந்திருந்த அனைவருக்கும் நட்சத்திர ஹோட்டலில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவிலுக்கும் ஹோட்டலுக்கும் கொஞ்ச தூரம் என்பதால் நடந்து சென்று கொண்டிருந்தனர்.............
ராஜலெக்ஷ்மி, குட்டிராஜாவிடம் விளையாடிக்கொண்டு கடைகளை காட்டி ரசித்து விட்டு வந்துகொண்டிருந்தாள்.
அனைவரும் ஹோட்டலுக்குள் சென்று அமர்ந்தனர் அப்போதுதான் கவிதாவுக்கு குட்டிராஜாவின் நினைவு வர அத்தையிடம் குழந்தையை கேட்டாள்.
அவன் ராஜலெக்ஷ்மியிடம் இருந்தான் அவள் எங்கே? காணோம்! என்று பரபரப்படைந்தனர்??????
மறுபடியும் வெளியில் வந்து ஆளுக்கொரு திசையில் தேடிக்கொண்டிருந்தனர் யார்கண்ணிலும் படவில்லை....
கவிதா மிகவும் பயந்து என்னங்க! எனக்கு பயமா இருக்குதுங்க! இந்த கூட்டத்தில் எப்படி எங்கு போய் தேடுவது என்று கண்ணீருடன் அவன் கையை பற்றிக்கொண்டாள்..........
பெரும்பாலும் எல்லா இடங்களிலும் தேடி விட்டனர் ஒரு உபயோகமும் இல்லை!!!!!!!!!
இறுதியில் ஒரு குப்பை தொட்டிபக்கம் குழந்தை அம்மா! அம்மா! பாத்திம்மா என்று அழுது கொண்டிருப்பதை பார்த்த ஒரு நபர் காவல்துறையிடம் ஒப்படைக்க வரும் சமயம் கவிதாவின் சித்தப்பா குழந்தையை பார்த்து நடந்த விபரத்தைக்கூறி அழைத்து வந்தார்..........
அந்த நபரிடம் இன்னொரு பொண்ணும் இந்த குழந்தையுடன் இருந்தாள் பார்த்தீர்களா?என்று விசாரித்தனர்.
இல்லை! குழந்தை மட்டுதான் தனியே அழுது கொண்டிருந்தது என்று சொல்லி விட்டு அவரும் கிளம்பிவிட்டார்.............
ராஜலெக்ஷ்மி இல்லாமல் குழந்தை மட்டும் வருவதை பார்த்ததும் அதிர்ச்சிதான்!!!
ஏதோ ஒரு விபரீதம் நடந்து விட்டது என்ற பயத்திலேயே கவிதா மயங்கி விழுந்தாள்??????
அவளை காரில் கொண்டு படுக்க வைத்து தண்ணீர் கொடுத்தான் ராஜா.
குழந்தையை வந்து அணைத்த ராஜாவின் தாய் கண்ணா! அத்தை எங்கடா? உன்கூட தானே வந்தாங்க எங்கே போனாங்கன்னு சொல்லுடா செல்லம் என்று கெஞ்சினாள்..............
"பாத்திம்மா அத்த அத்த என்ன விட்டாங்க யாரோ 2மாமா கைய புடிச்சி கூட்டிட்டு போனாங்க அங்கால என்ன விட்டாங்க சண்ட அத்தே" என்று மழலை பாஷையில் கூறியது அனைவருக்கும் புரிந்தது!!!!!!!!
வேணும்னே யாரோ செய்த சதி என்று ராஜா உட்பட அனைவருக்கும் புரிந்தது........
கவிதா மிகவும் வேதனைப்பட்டாள் என்ன விட என் திருமணத்தை நல்ல முறையில் நடத்த அவள் தானே பிரியப்பட்டாள்,,,,,,,,,ஐயோ! இப்பொழுது என் திருமணமே அவளுக்கு எமனாகி விட்டதே என்று அழுதாள்..........
நீ பயப்படாதே! உடனே போலிசுக்கு தகவல் கொடுக்கலாம்? ஒரு பிரச்சனையும் வராது வீணா மனச போட்டு குழப்பாதீங்க அம்மா நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தான்......
ராஜாவின் நண்பன் ரமேஷ்க்கு புதிதாக வந்திருக்கும் போலிஸ் அதிகாரியை தெரியும் அவன் என் முன்னாள் நண்பன் தான் இப்பவும் பழக்கத்தில் உள்ளான் அவன் வீட்டிற்கு சென்று தகவல் கொடுப்போம் அவன் பார்த்துப்பான் என்று சொல்ல!!!!!!!!!
ராஜா ரமேஷை உற்றுநோக்கினான் இது சரிபட்டு வருமா என்று யோசித்தான்???????
எல்லாம் சரியா இருக்கும் விஷயமும் வெளியில் போகாது உடனே கிளம்பு என்று ரமேஷ்,ராஜா மற்று இன்னொரு நண்பருமாக அந்த போலிஸ் அதிகாரியின் வீட்டிற்கு சென்றனர்!!!!
(அவர்கள் பார்க்க செல்லும் போலிஸ் அதிகாரி வேறுயாரும் இல்லை தான் தாராவின் நண்பனை கன்கானித்துக்கொண்டிருப்பவர்தான்)??????
தொடரும்............

