முயற்சி

தவழ்ந்து செல்லும் பிள்ளையும்
தத்தி நடக்க கற்குமே...
சிறகில்லா பறவையும்
வானில் பறக்கத் துடிக்குமே...
பின்ன பின்ன பிய்ந்திடும்
வலையை சிலந்தி முடிக்குமே..
வாழக் கற்றுக் கொள்ளவே....
வாழ்க்கைப் பயணம் புரியவே...
முயற்சி கொண்டு செய்திடின்
இகழ்ச்சி இல்லை வாழ்வினில்....!

எழுதியவர் : (malligai) (4-Feb-14, 2:09 pm)
Tanglish : muyarchi
பார்வை : 75

மேலே