பூந்தளிர் காலம்
கலைந்த கூந்தலை வருடும் - உன்
நேசமிகு கரங்கள், என்று என் கரங்களோடு சேரும்????
கண்சிமிட்டும் பூக்களாய் இருக்கும் -உன்
கண்கள் இரண்டும் என்று நேருக்கு நேர் என் கண்களை கண்டு பேசும்???
அந்தி மாலை தென்றல் அதில் அழகாய் அசைந்தாடும்,
பூ மலர்கள் கொண்ட செடிகளென ,
உன்னுடன் அருகில் அமர்ந்து , இந்த உலகம் ரசிக்க
இல்லை!!! இல்லை!!!
உன்னுடன் அளவி மகிழும் அந்த அழகை
இந்த உலகம் கண்டு ரசிக்க ஆசை!!!
என்னவளே !!
எப்போது வரும் அந்த இன்ப பூந்தளிர் காலம்!!!!!