ஹோட்டல்

""கஸ்டமருக்கும் உனக்கும் என்ன பிரச்னை? ஏன் டென்ஷனாகிச் சண்டை போடுற? ''

""இந்த ஓட்டல் எப்ப ஆரம்பிச்சுதுன்னு உனக்குத் தெரியுமான்னு கேட்டாரு... தெரியாதுன்னு சொன்னேன்...

இவர் பழைய முதலாளியா? இல்லை புது முதலாளியான்னு உங்களைக் கேட்டாரு.... தெரியாதுன்னேன்...

ஓட்டல்ல கிடக்கிற டேபிள்... சேர்... வட்ட கப் எல்லாம் எப்ப வாங்கினதுன்னு தெரியுமான்னு கேட்டாரு... தெரியாது சார்ன்னு சொல்லிட்டேன்...

கடைசியா பிளேட்ல கொண்டு வந்த வடையைப் பார்த்து... இதாவது எப்பப் போட்டதுன்னு தெரியுமா?ன்னு கேட்டாரு..

. அதான் கோபம் வந்துடுச்சு''

எழுதியவர் : முரளிதரன் (4-Feb-14, 5:19 pm)
Tanglish : hotel
பார்வை : 170

சிறந்த நகைச்சுவைகள்

மேலே