நான் தான் தெய்வம்

தான் விரித்த வலையில்விழுந்த ஈ ஒன்றை தாவி பிடித்தது சிலந்தி !
'' அய்யோ ...என்னை கொல்லாதே ....எளியாரை வலியார் அடித்தால் , வலியாரை தெய்வம் அடிக்கும் !''
என்று அலறியது :
'' கவலைப்படாதே .......அந்த தெய்வத்தை தான் இப்போது பார்க்க போகிறாய் ! ''
சொல்லிக்கொண்டே சிலந்தி அந்த ஈயை விழுங்கிய அக்கணம் ....
தன்னை யாரோ கவ்வி பிடிப்பது போன்ற உணர்வு அதனுள் ! கோபம் தலைக்கேற ,
'' யாரது ?....''
கேட்ட சிலந்திக்கு அமைதியாக பதிலளித்தது பல்லி !
'' நான் தான் தெய்வம் !''

எழுதியவர் : முரளிதரன் (4-Feb-14, 5:12 pm)
பார்வை : 278

சிறந்த நகைச்சுவைகள்

மேலே