நினைவுகள்

என்னவளே...
நான் விழித்திருந்த பல இரவுகளை கவிதைகளாகத்தான் மடித்து வைத்திருக்கிறேன்
என் நாட்குறிப்பில் உனக்காக
படிக்கத்தான் நீ இல்லை...
ஆம்,
நான் சுவாசிக்கும் நேரங்கள் கூட குறைவுதான்
உன்னை நேசிக்கும் நேரங்களை விட...
என் நெஞ்சத்தைக்கேட்டுப்பார் - இதுவரை
நான் நீயாகத்தான் வாழ்கிறேன் -நீ
என்னோடு இல்லாதபோதும் கூட...
இப்படிக்கு
-சா.திரு -