சொல்லு சொல்லு
சொல்லு ...சொல்லு .
.காதலை
கவிதையை
கடமையை
சொல்லு ...சொல்லு .
நினைத்ததை சொல்லு
நிஜத்தை சொல்லு
நீ
சொல்லும் வார்த்தை
பிறரை கொன்றுவிடாமல்
இருக்கும்
சொல்லை தேர்ந்து சொல்லு
அன்பைச் சொல்லு
அறிவைச் சொல்லு
அழகைச் சொல்லு
அங்கே நீ நில்லு
வெல்லும் சொல்லால்
சுத்தும் பூமியை வெல்லு
மல்லுக்கட்டும் மனங்களுக்கு
மயக்கும் வித்தையை சொல்லு
உள்ளம் என்னும் கோவிலுக்குள்
உண்மை என்னும் சாமியிடம் சொல்லு
சொல்லும் சொல் வெல்ல
துணையாய் வந்து நிற்க சொல்லு