நான்தான் பெண்
நான் அழகானவள்
என் எண்ணங்கள் அழகானவை
நான் தைரியமானவள்
என் திட்டமிடல் நேர்த்தியானவை
நான் அமைதியானவள்
என் முடிவுகள் சரியானவை
நான் குறும்பானவள்
என் குழந்தைத்தனம் இயல்பானவை
நான் அன்பானவள்
என் நட்புவட்டம் பெரிதானவை
நான் திமிறானவள்
என் செயல்கள் நேர்த்தியானவை
நான் முற்ப்போக்கானவள்
என் சிந்தனை காலத்திற்க்குட்பட்டவை
நான்தான் பெண்
உலக சக்திகளை இயக்குபவள்