என் காதலால் உனக்கு காதலை புரியவைப்பேன்...!

வார்த்தையின் வலியகரங்கள்
கொண்டு அடித்து விட்டாய்..
என் மனதில்..
ரணமாகி குருதியில்
நனைகிறது என் இருதயம்...
இன்பம் பெற்றாயோ
என்னை வருத்திவிட்டு..
நீ இன்பமாய் இருப்பாய் என்றால்
வருத்திக் கொண்டே இரு.
கலங்கமாட்டேன்..
என் காதலால் உனக்கு
காதலை புரியவைப்பேன்...

எழுதியவர் : கார்த்திக் . பெ (25-May-10, 11:47 am)
பார்வை : 1455

மேலே