துளிப்பாக்கள் ஷான்

துளிப்பாக்கள் (ஷான்)
====================

தொட்டால்
சிலிர்த்துக் கொள்கிறது
நீருக்குள் நிலவு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மரமும் வீடுகளும்
ஓடுகின்றன
ரயில் பயணம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாவு
விடுப்பில் இருக்கிறது
விரதம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இமைகளின்
மூடு விழா
மரணம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விரல்களில் குட்டுப்பட்டு
எழுதுகிறது
கணினி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதியவர் : சொ. சாந்தி (5-Feb-14, 10:18 pm)
பார்வை : 255

மேலே