காதலென்னும் சோலையினில்51

ராஜாவின் வேதனையை புரிந்துகொண்ட அந்த போலிஸ் அதிகாரி எப்டியாவது ராஜலெக்ஷ்மியை கண்டுபிடித்து விடலாம் தைரியமாக கிளம்புங்கள் என்று அனுப்பி வைத்தார்...........ராஜாவை அனுப்பி விட்டு பல யோசனையில் மூழ்கினார் இவர்!


"ஒரு வேளை பணத்திற்காக கடத்திருப்பாங்களோ?

இல்லை அந்த பொண்ணு மேலுள்ள ஏதாவது தகறாரா?

இல்லை குடும்ப பிரச்சனையா?

இல்லை அவள்தான் காதலித்தவன் கூட ஓடி போயிருப்பாளோ? வீட்டிற்குத்தெரியாமல்" என்று யோசித்துக்கொண்டிருந்தார்;இன்னொருப்பக்கம் ராஜாவின் வரவிற்காக கவிதா காத்துக்கொண்டிருந்தாள்..........


அத்தை! "என்னால கொஞ்சமும் தாங்கிக்கொள்ளமுடியவில்லை ராஜலெக்ஷ்மி சீக்கிரம் வரவேண்டும் இல்லையென்றால் நானும் உயிருடன் இருக்கமாட்டேன்" என்று கவிதா கண்ணீருடன் கூறினாள்.என்னம்மா "இப்படி எல்லாம் பேசாதே எனக்கு மட்டும் வருத்தம் இல்லியா? என்ன! அதான் ராஜா போயிருக்கான் இல்ல எல்லாம் சரி ஆயிடும்" என்று தன மனதில் உள்ள கவலையையும் மறைத்து கவிதாவை சமாதானப்படுத்தினாள் ராஜாவின்தாய் .........கவிதாவின் பெற்றோரும் அவளை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் எந்த முயற்சியும் செல்லுபடி ஆகவில்லை...........


(யாரும் எதுவும் சாப்பிடவுமில்லை)

கவிதாவுக்கு இன்னொரு எண்ணமும் மனதில் தோன்றியது "பிரசாத்திடம் என்ன பதில் சொல்வது அவனுக்கு இந்த வீட்டு தொலைப்பேசி எண்ணை கண்டிப்பாக பகிர்ந்திருப்பாள்; அவன் ஒரு வேளை அழைத்தால் என்ன பதில் சொல்வது என்று நினைத்து இன்னும் மன வேதனை அடைந்தாள்........அப்பொழுது ராஜா வரவே ஓடி சென்று விபரத்தைக்கேட்டாள்!


அவனும் சோர்வுடன் இருக்க, அங்கு பேசினது எதையும் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை?????


யாரும் பதற்றப்படவேண்டாம் அந்த அதிகாரி மிகவும் நல்லவராக இருக்கிறார் கண்டிப்பாக கண்டு பிடித்து விடலாம் என்று ஆறுதல் கூறினான்......


அதற்கு முன்னால் எனக்கு ஒரு வேலை இருக்குது நான் வெளியில் செல்லவேண்டும் குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்............


அப்பொழுது தொலைப்பேசி அழைக்கவே ராஜா போய் எடுத்தான்.


ஹலோ! என்றதும்; நான் தான் பிரசாத் பேசுறேன் நல்லா இருக்கீங்களா? கவிதா எங்கே? என்று கேட்டான்??????


ஓ பிரசாத்தா? நான் நல்லா இருக்கேன். கவி இதோ இங்க தான் இருக்கா கொடுக்கிறேன் என்று தொலைபேசியை வைத்து விட்டு கவிதாவை அழைத்தான்..........


நான் பேசல என்று கை சைகையால் சொன்னாள், பரவாயில்லை வா பேசு என்று வற்புறுத்தினான்......


(வேறு எதுவும் பேசவேண்டாம் என்று அவனு கண்ஜாடை காட்டினான்)

அவளும் அதை புரிந்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.

சொல்லுடா! நல்லா இருக்கியா?இப்போதுதான் எனக்கு போன் பண்ண தோணிச்சா? என்று கேட்டதற்கு "sorry கவிதா கொஞ்சம் வேலையா இருந்தேன் அதான் பேச முடியவில்லை அங்கு எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடிச்சா? என்று விசாரித்தான் ஆமா! என்று வாய் சொன்னாலும் மனது துடித்தது கவிதாவிற்கு????சரி உன் அண்ணிய காணோம் என்று கேட்க? அவள் ராஜாவைப்பார்த்தாள் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.............


(அப்பொழுது ராஜா சைகையின் மூலம் குளிக்கிறான்னு சொல்லு என்று சொல்ல)
கவிதாவும் அவள் குளிச்சிட்டிருக்கா, அப்புறம் பேசுறியா என்று சொல்லி போனை வைத்து விட்டு விம்மி விம்மி அழுதாள்...........


ராஜா அவளை தேற்றி விட்டு தான் கிளம்பத்தயாரானான்.


ராஜாவிற்காக காத்துக்கொண்டிருந்தார் அந்த போலிஸ் அதிகாரி......


அவர் மாற்று உடையில் தான் இருந்தார் அங்கிருந்து வெளியில் வந்து டீ கடை பக்கம் நின்ற போது அவர் கண்காணித்துக்கொண்டிருந்த அந்த கொலைக்கேசில் உள்ள நபர்(தாராவின் நண்பன்) சென்றுகொண்டிருந்தான்..............


அவனுக்கு தெரியாமல் அவனை பின்தொடர்ந்து சென்றார் இந்த போலிஸ் அதிகாரி.................
தொடரும்.................

எழுதியவர் : (6-Feb-14, 3:54 pm)
பார்வை : 225

மேலே