இதுவும் கடந்து போகும்

என் வாழ்வின் துயரம் உயிர் பெற்றது
என் வாழ்வின் சந்தோஷம் துயில் கொண்டது

கஷ்டங்கள் யாவும் படையென வருகிறது
துன்பங்கள் யாவும் உயிரென பரவுது
என்று நினைக்கும் உன் நிமிடங்கள்
வெற்றியின் சறுக்கு

தாய்மையின் கண்ணீரில் தான்
நாம் உயிர் பெற்றோம்
தந்தையின் இரத்தத்தில் தான்
நாம் சிகை அழகு கொண்டோம்

அவர் அவர் கஷ்டங்களை நினைத்திருந்தால்
நாம் பிறந்திருப்போமா
துயரங்களை சந்தித்திருப்போமா
வாழ்வை வாழ்ந்திருப்போமா

சிந்திய வியர்வை உடலில் சேர்க்க முடியாது
பண்ணிய பாவங்கள் மறைக்க முடியாது

நடந்தது நடந்து விட்டது
நேரும் நொடிகள் நாம்
செதுக்கிய கல்லில் இருந்து வந்தது

எதிர்த்து நில்
அப்பொழுது அலையின் வேகத்தை பார்க்க முடியும்
எதிர் நீச்சல் போட முடியும்
பயந்து போனால் இழப்பது
வாழ்வை அல்ல
உயிரின் மதிப்பை

இதுவும் கடந்து போகும் என நினை
கஷ்டங்கள் கடந்து போகும்
சந்தோஷம் கடந்து போகும்
துயரம் கடந்து போகும்
போதை கடந்து போகும்
பயம் கடந்து போகும்
சங்கடம் கடந்து போகும்
தற்பெருமை கடந்து போகும்

பிறரை வாழவை : வாழ்ந்துவிடலாம்

எழுதியவர் : கண்மணி (6-Feb-14, 9:39 pm)
பார்வை : 3701

மேலே