அம்மா

********
ஒருநாளில் உயிர்த்தழியும் ஈசலல்ல அம்மா
ஒருவருக்கு ஒருவருறும் பூசலல்ல அம்மா
திருநாளில் வணங்கமட்டும் ஈசனல்ல அம்மா
திருவிளக்காய் அன்புஒளி வீச'வல்ல அம்மா
கருவோடு அன்றாடம் பேச'வல்ல அம்மா
கருணையெனும் தேனள்ளிப் பூச'வல்ல அம்மா
உருதந்து உயிர்தந்த ஓவியமே அம்மா
உயிருக்குள் உயிரான நேசமிகு அம்மா!
*
அன்னையர் தின வாழ்த்துகள்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-May-24, 3:07 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 25

மேலே