பேருந்து பயணம்
நாம் பேருந்தில்
அழுதுகொண்டு,
புத்தகப்பை கொண்டு,
சென்றதுண்டு
பள்ளி நாட்களில்..!
கவலை விட்டு,
கலகலப்பாய் சிரித்துவிட்டு,
கடந்ததுண்டு,
கல்லூரி நாட்களில்,
இன்பம் மறந்து,
வீடு துறந்து,
வெகுதுரம் போனதுண்டு
வேலை நாட்களில்.
"சாலையில்
விரட்டி பிடிக்கும் வேகம்,
விட்டு கொடுக்கும் விவேகம்,
நல்ல நட்பை கொடுத்த படிக்கட்டு கம்பி,
இனிய காதலை காட்டிய ஜன்னல் கண்ணாடி"
"பெண்களுக்கு தாராளமாய் இடஒதுகிடு கொடுக்கும் ஒரே ஒரு இடம்"
"படிக்காதவனுக்கும் சீட்டு கிடைக்கும்,
படித்தவனுக்கும் கிழித்து தான் கொடுக்கப்படும்"
என்றும் சமத்துவம் நிலவும் இந்த
-பேருந்து பயணம்