ஐஷ்வர்யா ராய்

"நம்ம வீட்டு பூட்டை உடைச்சு திருடின திருடன் ரொம்ப நல்லவர்னு எப்படி சொல்றீங்க?"

"கதவு மேலே, பெட்டெர் LOCK நெக்ஸ்ட் டைம்னு எழுதிட்டு போய்ருக்கானே?"
------------------------------------------------------------

"பொண்ணு ஐஷ்வர்யா ராய் மாதிரின்னு சொன்னீங்க. ஆனா அப்படி ஒன்னும் அழகா தெரியலயே?"

"அழகுலே ஐஷ்வர்யா ராய் மாதிரினு யார் சொன்னது? வயசுலே.. பொண்ணுக்கு 40 வயசாகுது"
-----------------------------------------------------------
"தேர்தல்லே நம்ம கட்சி வேட்பாளரக்கு 207 ஓட்டு கிடைச்சதை நினைச்சு தலைவர் ஆசசரியப்பட்டார்!"

இதுலே என்ன ஆச்சரியம்?

"அவர் 200 ஓட்டுக்குதான் பணம் கொடுத்தாராம்".
----------------------------------------------

"தலைவர் வீட்டில் இருந்த பணம், நகை எல்லாம் திருடு போய்ட்டதாமே, எப்படி?"

"கூட்டணி பேச எந்த நேரமும் வருவாங்கன்னு கதவை திறந்து வச்சு தூங்கிஇருப்பார்."

எழுதியவர் : முரளிதரன் (7-Feb-14, 2:24 pm)
பார்வை : 203

சிறந்த நகைச்சுவைகள்

மேலே