பணியாள்
ஒரு ரேஷன் கடை வாசல்.
கடை திறக்கறதுக்கு முன்னாடியே எல்லாரும் வந்து வரிசையாய் நின்னுட்டாங்க. கடைசியா வந்த ஒருத்தர் கியூவிலே முன்னாடி போறதுக்கு முயற்சி பண்ணினார்.
ஏற்கனவே நின்னக்கிட்டிருக்கிறவங்க, அவரை முன்னாடி போறதுக்கு விடலே. 'கடைசியா போயி நில்லுய்யா!' என்று கத்தினார்கள்.
அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. முண்டியடித்துக் கொண்டு முன்னால் போக முயற்சி பண்ணினார்.
எல்லாரும் சேர்ந்து அவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்து பின்னால் நிறுத்தி விட்டார்கள்.
''இதோ பாருப்பா! நாங்க இருக்கிற வரைக்கும் நீங்க முன்னாடி போய் எதையும் வாங்க முடியாது.... தெரிஞ்சிக்கோ!''
அவன் நிதானமாக சொன்னான்.
"நான் தான் இந்த கடை பணியாள். நான் போகாமல் நீங்க எதையும் வாங்க முடியாது. அதை நீங்க தெரிஞ்சுக்கோங்க...."